கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோவை, ஆக. 14: கோவையில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், இன்று இரவு முதல் வரும் 17-ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளுக்கு 80 பஸ்கள், சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 60 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. விடுமுறை நாட்களில் பஸ்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

Related Stories: