சென்னை: ‘கூலி’ படம் வெற்றியடைய எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதள பதிவில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.
