மதுக்கரை, ஆக.13: சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளலூர் கோஜு ரியோ டைமண்ட் ஸ்டார் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 3-வது சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டுக்கான போட்டி கடந்த வாரம், தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார். இதில், கோவை வெள்ளலூரை சேர்ந்த கோஜு ரியோ டைமண்ட் ஸ்டார் கராத்தே டூ இந்தியா மாணவர்கள் மற்றும் ரத்தினம் இண்டர்னேஷனல் பப்ளிக் பள்ளி, சிந்தி இண்டர்னேஷனல் பள்ளி, எஸ்.எஸ்.பி. வித்யா நிகேதன் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு, வெற்றி பெற்று கோப்பைகளை வென்றனர்.
அதுமட்டுமின்றி, ஒட்டு மொந்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றனர். சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கலந்து கொண்டு, அதிக கோப்பைகளை வென்று கோவைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களும் வெகுவாக பாராட்டினர்.
