கோவை, ஆக. 13: கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறு மைய அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை நேரு விளையாட்டு அரங்கில், ‘அ’ குறுமைய தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டியை தேவாங்க அரசு உதவிபெறும் பள்ளி நடத்தி வருகிறது. இதில், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், தொடர் ஓட்டம், 400 மீ ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நேற்று போட்டி நடந்தது.
சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 17 வயதிற்கு உட்பட்ட வட்டு எறிதலில் ஆரிப் முகமது முதலிடமும், ராஜூ 2ம் இடம், மாதேஸ் 3ம் இடம் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மும்முறை தாண்டுதலில், முகமது இர்பான், ஹரிஹரன், ஐஸ்வரன் ஆகியோரும், நீளம் தாண்டுதலில் கிஷோர், முகமது பராஹ், பாசில் ரகுமான் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 14 வயது பிரிவில் மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில், முகேஷ் முதலிடமும், உயரம் தாண்டுதலில் அர்ஹனியா முதலிடமும் பிடித்தனர்.
