அரியலூர் மாவட்டத்தில் சிறந்த காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

அரியலூர், ஏப். 5: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய சரகம் வீரசோழபுரம் கிராமத்தில் மார்ச் 27 அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம், பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற எதிரிகளை பிடிக்குமாறு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, தா.பழூர் காவல் நிலைய சரகம் மதனத்தூர் சோதனை சாவடியில் நடைபெற்றது.

வாகன சோதனையின் போது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற எதிரியை, தங்களது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்ய உதவி புரிந்த முதல் நிலை காவலர்களான பிரபு மற்றும் உலகநாதன் ஆகிய இருவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்து, அவர்களின் மெச்ச தகுந்த பணியை பாராட்டி, பண வெகுமதி அளித்து, காவல்துறையினர், காவல் பணியில் மென்மேலும் சிறப்பாக பணி புரிய அவர்களது பணியை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

The post அரியலூர் மாவட்டத்தில் சிறந்த காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: