தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது: ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் வாதம்

மதுரை: தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் 3வது நீதிபதி விஜயகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?.ஆடு, கோழி பலியிடுவதற்கு, கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி இருக்கிறதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிபதியின் கேள்விகளுக்கு வருவாய் ஆவணங்களுடன் அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு என்பது ஜாதியிலோ, மதத்திலோ, மனிதர்களுக்கு உள்ளேயோ இருக்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஒன்றிய தொல்லியல்துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஆகஸ்ட்.13க்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Stories: