வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்காக நீதிமன்ற பணியை புறக்கணிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யக் கூடாது என நீதிபதி தெரிவித்திருந்தார். கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர், பார் கவுன்சில் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்தது.
கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: