துவரங்குறிச்சி, ஆக.11: கோவில்பட்டியில் பள்ளிக்கு செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்சி மாவட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர். அப்பகுதியில் சாலை பள்ளமாக உள்ளதால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது .மேலும் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளம் எங்கு உள்ளது என்று தெரியாமலும் சிலர் விழும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இப்பகுதியில் அதிகளவில் கடைகள் உள்ளதாலும் கடைக்குச் சென்று பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாத சூழலும் உருவாகி உள்ளது.மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கும் சிரமமாக உள்ளது. இதனால் உடனடியாக கோவில்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி அந்த இடத்தில் உள்ள பள்ளத்தில் மண் நிரப்பி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
