பெண்களிடையே ஆரம்ப நிலை மார்பக புற்று நோயை கண்டறிய நவீன மையம்: ஐஸ்வர்யா மருத்துவமனையில் தொடக்கம்

சென்னை: பெண்களிடையே ஆரம்ப நிலை மார்பக புற்று நோயை கண்டறிய நவீன மையத்தை ஐஸ்வர்யா மருத்துவமனை தொடங்கி உள்ளது.ஐஸ்வர்யா மார்பக மையம், டோமோசிந்தசிசுடன் கூடிய மேம்பட்ட 3டி டிஜிட்டல் மேமோகிராபி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது அடுத்த தலைமுறை இமேஜிங் தொழில்நுட்பமாகும், இதன் மூலம் புற்றுநோய் கட்டிகளை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிந்து சிறப்பான சிகிச்சை அளித்து நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

ஐஸ்வர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண் முத்துவேல் கூறியதாவது: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பார்வையை மாற்ற விரும்புகிறோம். ஒவ்வொரு பெண்ணும் தாமதமோ அல்லது தயக்கமோ இல்லாமல் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையைப் பெற தகுதியானவர்கள். இந்த மையம் மருத்துவ சிறப்பையும் நோயாளிக்கான ஆறுதலையும் ஒருங்கே கொண்டுள்ளது. மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மட்டும் செய்யப்படாமல் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு சிறப்பான பதில்களுடன் சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்கு தேவையான ஆதரவை இந்த மையம் வழங்கும்.

ஐஸ்வர்யா மார்பக மையம் 3டி டிஜிட்டல் மேமோகிராபி, மார்பக கட்டிகள் மற்றும் வலிக்கான ஆலோசனைகள், மார்பகப் புற்றுநோயின் குடும்ப பின்னணி கொண்ட பெண்களுக்கான பரிசோதனை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: