ஜெயங்கொண்டத்தில் மண்வள நாள் விழா

ஜெயங்கொண்டம், டிச.7: ஜெயங்கொண்டம் வேளாண்மை வட்டாரத்தில் தேவமங்கலம் கிராமத்தில் மாவட்ட அளவிலான உலக மண்வளநாள் விழா தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் சார்பாக நடத்தப்பட்டது. விழாவில் வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி தலைமை வகித்து மண்வளநாள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில், மண்வள பாதுக்காப்பு, இயற்கை உரமிடல்,பசுந்தாள் உரமிடல், நுண்ணூட்ட உரமிடல் மற்றும் சமச்சீரான அளவில் மண் ஆய்வின் அடிப்படையில் ரசாயன உரங்கள் இடுதல் குறித்து ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார்.

மண்மாதிரி எடுத்தல் மற்றும் மண்வள அட்டை அடிப்படையில் உரம் இடுதல் குறித்து அரியலூர் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சுகந்தி எடுத்துக்கூறினார். திரவ உயிர் உர உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர் திரவ உயிர் உர பயன்பாடு குறித்து எடுத்துக்கூறினார். 50 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி இயக்குநர்,ஜெயங்கொண்டம் கீதா முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் தினேஷ் மற்றும் செல்வம் செய்திருந்தனர்.

Related Stories: