கோவை, ஆக.9 : கோவை சுந்தராபுரம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் கடந்த ஜூன் 29ம் தேதியன்று நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற வழக்கில், குனியமுத்தூரை சேர்ந்த நிசாருதீன் (29) என்பவரை சுந்தராபுரம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் நிசாருதீன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவன சுந்தர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் அவரிடம் வழங்கினர்.
