போராட்டத்தின் போது பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து

கோவை, ஆக. 9: போராட்டத்தின் போது பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கால் டாக்சி சங்க உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி, கால் டாக்சி டிரைவர்கள் “வாடகை பைக்” பிரச்னை தொடர்பாக  அவர்களது சங்கம் சார்பில் கலெக்டர் பவன்குமாரிடம் மனு அளித்தனர். அதன்பின், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சங்கத்தின் உறுப்பினர் கணபதியைச் சேர்ந்த சேதுபதி (33) என்பவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கோவையில் கால் டாக்ஸி டிரைவர்கள் அரசுக்கு உரிய வரிப்பணத்தை செலுத்தி விட்டு இயக்கி வருகிறோம். ஆனால், வாடகை பைக் டாக்ஸி நடத்துபவர்கள் எந்த வரிகளும் செலுத்துவது இல்லை.

கோவை போன்ற பெரிய நகரில் முகம் தெரியாத நபர்களுடன் பெண்கள் பைக்கில் குறைந்த பணத்திற்காக செல்வது சரியில்லை என்றார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சேதுபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: