இந்திய பொருளாதாரம் 7% வளர்ச்சி அடைந்துள்ளது: செத்த பொருளாதாரம் என்ற டிரம்பின் விமர்சனத்துக்கு நிதி ஆணைய தலைவர் பதிலடி

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் கவலை இல்லை. இந்தியா,ரஷ்யாவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தால் வீழ்ந்து கிடக்கும் அவர்களது பொருளாதாரம் மேலும் வீழ்ந்து தான் போகும். ரஷ்யா, இந்தியா நாடுகள் செத்த பொருளாதார நாடுகள் என விமர்சித்தார். இந்தநிலையில், 16வது நிதி ஆணைய தலைவர் அரவிந்த் பனாகரியா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,‘‘ இந்திய பொருளாதாரம் 7% அதிகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்கா 7% க்கும் அதிகமாக வளர முடியாது. டாலர் அடிப்படையில், நாங்கள் இன்னும் வேகமாக நகர்கிறோம். எங்களுடையது திறந்த பொருளாதாரம். செத்த பொருளாதாரம் என்பதற்கான தெளிவான வரையறை எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை இறந்த உடல்கள் நகரலாம். ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுப்படுத்த வேண்டும் ’’ என்றார்.

Related Stories: