மதுக்கரை, ஆக. 7: பிச்சனூர் ஊராட்சியில் ரூ.1.30 கோடியில் தார் சாலை அமைப்பு பணிகளை எம்.பி ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார். கோவை தெற்கு மாவட்டம் மதுக்கரை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில், நபார்டு திட்டத்தின் மூலம், ரூ.89.28 லட்சத்தில், வீரப்பனூர் வேலந்தாவளம் ரோடு முதல் காளியப்பன் தோட்டம் வரை ரூ.37.73 லட்சத்தில் ரொட்டி கவுண்டனூர் ரோடு முதல், வீரப்பனூர் ஆறு வரை உள்ள தார் சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், ஒன்றிய செயலாளர் நந்தகுமார் முன்னிலையில், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், எட்டிமடை பேரூர் கழக செயலாளர் ஆனந்தகுமார், திருமலையாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் ராமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரகுநாதன், பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், அயலக அணி மாவட்ட தலைவர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
