காங்கயம், டிச.7:காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடைபெறுகிறது. நேற்றைய சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து 50 கால்நடைகள் விற்பனைக்குவந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது.