புதுச்சேரியில் பெண்கள் உள்பட 4 பேரிடம் ஆன்லைன் பண மோசடி

புதுச்சேரி, ஆக. 7: புதுச்சேரியில் நூதன முறையில் பெண்கள் உள்பட 4 பேர் ரூ.56 ஆயிரத்தை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளனர். புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விற்பனையாளர் பேசுவதாக கூறி, ேமற்கூறிய நபரிடம் ரூ.40 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வேலை குறித்து பார்த்துள்ளார். பின்னர் அப்பெண் அதிலிருந்த ெதாலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது மர்ம நபர் வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி அப்பெண்ணும், ரூ.10 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். இதேபோல் லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ஒருவர் ஆன்லைனில் சூதாட்டத்தில் ரூ.4 ஆயிரம் பணத்தை இழந்துள்ளனர். மேலும் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரூ.2,600க்கு ஆடை ஆர்டர் செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.56 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: