அருணாச்சலில் 11 இடங்களுக்கு புதிய பெயர்: சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

பீஜிங்: இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்திற்குட்பட்ட 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டது. சீன அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய விதிமுறைகளுக்கு இணங்க இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 2 நிலப்பகுதி, 2 குடியிருப்பு பகுதிகள், 5 மலைகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவற்றுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்,‘‘இதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் பார்த்து இருக்கிறோம்.

சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முழுவதுமாக நிராகரிக்கிறோம். அருணாசலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகின்றது. சீனாவின் பெயர் மாற்ற முயற்சி உண்மையை மாற்றாது” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கவலை

சீனாவின் புதிய பெயர்கள் சூட்டும் நடவடிக்கை கவலையளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில்,‘‘மூன்றாவது முறையாக சீனா நமது அருணாசலப்பிரதேசத்தின் பகுதிகளுக்கு பெயர் சூட்டியுள்ளது. அருணாசலப்பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருகிணைந்த பகுதியாக இருக்கும். சீனாவுக்கு எதிரான பிரதமர் மோடியின் மவுனத்தின் விளைவை நாடு எதிர்கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

The post அருணாச்சலில் 11 இடங்களுக்கு புதிய பெயர்: சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: