ஒடிசா லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி ஊழல் வழக்கில் கைதான அதிகாரிக்கு 44 வீட்டு மனைகள்: தங்கம், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள பவுத் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளராக இருப்பவர் கோலப் சந்திரா ஹன்ஸ்டா. இவர் அளவுக்கதிமாக சொத்து குவித்துள்ளதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஒரு கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி, ரூ.2.38 லட்சம் பணம் இருந்தது. லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். மேலும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு 44 வீட்டு மனைகள், ஒரு அடுக்குமாடி கட்டிடம் சொந்தமாக இருப்பதும், வங்கியில் ரூ.1.34 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்ததற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: