5ம் ஆண்டில் பணியாற்றும் ஆயருக்கு வாழ்த்து

1, ஆக.5: சேலம் மறை மாவட்ட ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு 4 ஆண்டு கடந்து, 5ம் ஆண்டில் பணியாற்றும் ஆயர் அருள்செல்வம் ராயப்பனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விழா நேற்று நடந்தது. மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம், மறை மாவட்ட பொருளாளர் ஸ்டேன்லி குமார் ஆகியோர் ஆயருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினர். தொடர்ந்து, புனித தெரசாள் தொழில் பயிற்சி பள்ளி தாளாளர் ஆசிர்வாதம், அருட்தந்தை சொரூபன், ஆயரின் செயலர் எட்வின் ஆகியோர் ஆயரிடம், அவரது தொலைநோக்கு சிந்தனை, நற்செய்தி அறிவிப்பு பணி தொடர வாழ்த்து தெரிவித்தனர். ஆயர் இல்லத்தில் மாலை நடந்த நிகழ்ச்சியில், மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் எழுதி பாடிய உன்புகழ் பாடுவேன் என்கின்ற ஆராதனை பாடல் ஆடியோ வெளியிடப்பட்டது. இதனை மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வட்டார முதன்மை குருக்கள் அருளப்பன் (ஆத்தூர்), அழகுசெல்வம் (சேலம்), சிங்கராயன் (மேட்டூர்), கிளமென்ட் (திருச்செங்கோடு) மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: