சிறைச் சுவர் ஏறிக்குதித்து 4 பாலியல் கைதிகள் தப்பியோட்டம்: சட்டீஸ்கரில் பரபரப்பு

கோர்பா: கோர்பா மாவட்ட சிறையில் இருந்து, பாலியல் மற்றும் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 4 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்றனர். சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்ட சிறையில், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்ட வழக்குகளில் தொடர்புடைய விசாரணைக் கைதிகளான தசரத் சிதார் (19), சந்திரசேகர் ரதியா (20), ராஜா கன்வர் (22), சர்னா சிங்கு (26) ஆகிய நால்வரும், நேற்று முன்தினம் மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள், சிறை வளாகத்தில் இருந்த மாட்டுத் தொழுவத்தின் சுவரில் கயிற்றைப் பயன்படுத்தி ஏறி தப்பிச் சென்றனர்.

அவர்களில் சந்திரசேகர் ரதியா ராய்கர் மாவட்டத்தையும், மற்ற மூவரும் கோர்பா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதுடன், கைதிகள் தப்பித்தல் சம்பவம் குறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாகக் உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: