பில்லி சூனியத்தால் பெண் இறந்ததாக கூறி இளைஞரை கொன்று மர்ம உறுப்பை வெட்டி எறிந்த மக்கள்

 

 

புவனேஸ்வர்: ஒடிசாவில் பில்லி சூனியம் வைப்பதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது மர்ம உறுப்பைத் துண்டித்த கிராம மக்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு 40 வயதுமிக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண், பில்லி, சூனியம், மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்த 35 வயது நபர் வைத்த பில்லி சூனியத்தால்தான் இறந்துவிட்டதாகக் கிராம மக்கள் சந்தேகித்தனர். இதனால், தன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சிய அந்த இளைஞர், தனது குடும்பத்தினருடன் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மாமனார் வீட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் தான் செல்வதற்கு முன்பு, தனது ஆடு, மாடுகளை பார்த்துக்கொள்ளுமாறு தனது மைத்துனியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தனது கால்நடைகளை அழைத்துச் செல்வதற்காக நேற்று முன்தினம் மீண்டும் அவர் கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரைக் கடத்திச் சென்ற கிராம மக்கள், அவரை கழுத்தை நெரித்துக் கொன்றதுடன், அவரது மர்ம உறுப்பையும் துண்டித்து, உடலை அருகில் உள்ள ஹரபங்கி அணைப் பகுதியில் வீசி எறிந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: