பொன்னமராவதி பகுதியில் 2 நாட்களாக மிதமான மழை

பொன்னமராவதி, டிச.4: பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புரெவி புயல் காரணமாக இரு தினங்களாக காற்றுடன் பெய்த மழையால் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சாலைகளில் சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார சுற்றுவட்டாரப் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக நேற்றுமுன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று முழுவதும் மிதமான மழைபெய்து வருகின்றது. புயலின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே முடங்கினர். மேலும் சாலை வெறிச்சோடி காணப்பட்டன.

பொன்னமராவதி-பூலாங்குறிச்சி ரோட்டில் மாம்பலத்தான் ஊரணி அருகே காற்றில் முள்முருங்கை மரம் சாய்ந்து விழுந்தது. அதனை தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் சப்கலெக்டர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் பேரூராட்சி செயல்அலுவலர் தனுஷ்கோடி தலைமையில் தூய்மைபணியாளர்களால் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

இதேபோல பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையில் செம்பூதியில் சாய்ந்த மரம் பொக்லின் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. மின்சாரம் விட்டு விட்டு வந்தது. தொடர் மழையினால் கால்நடைகளுக்கு விவசாயிகள் சிரமப்பட்டு தீவனம் போடுவதற்கும் மழையில் நனையாமல் கட்டுவதற்கும் சிரமப்பட்டனர்.

Related Stories: