60 ஆண்டுகளில் இதுவே முதன்முறை!: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இன்றி நடந்த நாடாளுமன்ற விழா..அவையை அலங்கரித்தது கிரீடம்..!!

லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்ற விழாவில் வயது மூப்பு காரணமாக பங்கேற்கவில்லை. பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பொறுப்பேற்று அடுத்த மாதத்துடன் 70 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இதனை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இளவரசர் பிலிப்ஸ் கடந்த ஆண்டு மரணமடைந்த நிலையில், 96 வயதாகும் ராணி, வயது மூப்பின் காரணமாக அவதியுற்று வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்திற்கு பிறகு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் 60 ஆண்டுகளில் முதன்முறையாக இரண்டாம் எலிசபெத் இல்லாமலேயே பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டம் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. ராணியின் இடத்தில் இளவரசர் சார்லஸ் இருந்து விழாவை சிறப்பித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் தொடக்க விழா உரையை ராணி நிகழ்த்துவதே பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இருப்பினும் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்காததால் அவரது மகன் சார்லஸ் உரையாற்றினார். அவருக்கு அருகில் ராணியின் கிரீடம் வைக்கப்பட்டிருந்தது. உரையை மேற்கொள்ளும்போது ராணியின் இந்த அரசு மேற்கொள்ளும் என்றே சார்லஸ் தெரிவித்தார். சார்லசுக்கு அருகில் அவரது மனைவியும், இளவரசியுமான கமீலா மற்றும் அவரது மகனும் இளவரசருமான வில்லியம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், தனது 70 ஆண்டுகால பொதுவாழ்வில் 1959, 1963 ஆகிய ஆண்டுகள் மட்டுமே நாடாளுமன்ற தொடக்க விழாவில் பங்கேற்றதில்லை. இந்த இரு ஆண்டுகளிலும் அவர் கர்ப்பமாக இருந்தார். ஆண்டுதோறும் இந்த விழாவில் ராணி சாரக் வண்டியில் வந்து பாதுகாவலர்கள் சீருடையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவதை காண பலரும் திரளுவது வழக்கமாகும். வயது மூப்பு காரணமாக அரச நடைமுறைகளில் இருந்து ஒதுங்கி வரும் ராணி, படிப்படியாக தனது பொறுப்புகளை இளவரசர் சார்லஸிடம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் ஓய்வுபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. …

The post 60 ஆண்டுகளில் இதுவே முதன்முறை!: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இன்றி நடந்த நாடாளுமன்ற விழா..அவையை அலங்கரித்தது கிரீடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: