2வது ஒன்டேவிலும் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவோம்: ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி

சட்டோகிராம்: வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் ஆப்கன் வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கன் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 331 ரன் குவித்தது. அதிகபட்சமாக ரமனுல்லா குர்பாஸ் 145 (125பந்து), இப்ராகிம் ஜட்ரன் 100 ரன் விளாசினர். பின்னர் களம் இறங்கிய வங்கதேசம் 43.2 ஓவரில் 189 ரன்னுக்கு சுருண்டது. இதனால் 142 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆப்கன் தொடரை கைப்பற்றியது. ஆப்கன் தரப்பில் பரூக்கி, முஜீப் ரகுமான் தலா 3 விக்கெட்வீழ்த்தினர்.

3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.வெற்றிக்கு பின் ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி கூறுகையில், தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது அணியின் சிறப்பான ஆட்டம். தொடக்க வீரர்கள் மிகவும் நல்ல தொடக்கம் அளித்தனர். அடுத்து உலக கோப்பையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில வருடங்களாக இந்த அணியை உருவாக்கி, ஒவ்வொரு தொடரிலும் முன்னேறி வருகிறோம். ஆசியக் கோப்பை, உலகக் கோப்பையிலும் சிறப்பாகச் செயல்படுவோம் என நம்புகிறோம் என்றார்.

* உலக கோப்பை கிரிக்கெட் இன்னும் 87 நாள்

உலககோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசியவர்களில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் முதல் இடத்தில் உள்ளார். இவர் 2019ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் 17 சிக்சர் விளாசி உள்ளார். வெஸ்ட்இண்டீசின் கிறிஸ்கெய்ல் 2025ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 16 சிக்சர் விளாசி 2வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் மார்ட்டின் குப்டில் 2015ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 11, டேவிட் மில்லர் அதே தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக 9, ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 2003ல் இந்தியாவுக்கு எதிராக 8, பாகிஸ்தானின் இம்ரான்நசீர், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், தென்ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் தலா 8 சிக்சர் விளாசி உள்ளனர். இந்திய வீரர்களில் கங்குலி 1999ல் இலங்கைக்கு எதிராக 7 சிக்சர், யுவராஜ் சிங் 2007ல் பெர்முடாவுக்கு எதிராக 7 சிக்சர் விளாசி உள்ளனர்.

The post 2வது ஒன்டேவிலும் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவோம்: ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: