ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது

திருவொற்றியூர்: மாதவரம் ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடமிருந்து ஒப்பந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

மாதவரம் பால் பண்ணை ஆவின் நிறுவனத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு பின்னர் ஒப்பந்த லாரிகள் மூலம் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஆவின் பால் டீலர்கள், விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஆவின் நிறுவன அதிகாரிகள் ஒப்பந்த லாரிகளில் ஏற்றப்பட்ட பால் பாக்கெட் எண்ணிக்கையை மறு ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு ஒப்பந்த லாரியில் திருட்டுத்தனமாக கூடுதலாக 78.5 லிட்டர் பால் பாக்கெட் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆவின் நிறுவன துணை மேலாளர் முருகன், மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் வினோத் (25) மற்றும் உதவியாளர் மனோகர் (25) ஆகியோரை கைது செய்தார். அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். ஒப்பந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: