ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்: வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..!!

டெல்லி: 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. நாளை முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் நாள் ஒன்றிற்கு ரூ.20,000 வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி இருப்பவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த அறிவிப்பை அடுத்து பல்வேறு இடங்களில் ரூ.2000 நோட்டுகளை வாங்குவதில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி,

* ரூ.2000 நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும்.

* தினமும் எத்தனை 2000 ரூபாய் தாள்கள் மாற்றப்படுகிறது என்று ரிசர்வ் வங்கிக்கு முறையாக தெரிவிக்க வேண்டும்.

* ரூ.2000 தாள்களை பெற்றுக்கொண்டு வேறு ரூபாய் தாள்கள் அளிக்கப்பட்ட விவரம், ரூ.2000 தாள்கள் டெபாசிட் செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளை வழங்குவதற்கான படிவத்தையும் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

The post ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்: வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..!! appeared first on Dinakaran.

Related Stories: