2 ஆண்டுக்குபின் மதுரையில் துவக்கம் மருத்துவக் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

 

மதுரை, ஜூன் 9: மதுரை மருத்துவக் கல்லூரியில், தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. மதுரை மருத்துவக் கல்லூரியில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நேற்று நடந்தது. போட்டியை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் துவக்கி வைத்தார். மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் வழிகாட்டுதலின்படி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் மணிவண்ணன், டாக்டர் விஜயராகவன், டாக்டர் முத்துக்குமார் மற்றும் டாக்டர் சேக்இக்பால் ஹுசேன் மேற்பார்வையில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

கிரிக்கெட், வாலிபால், புட்பால், கபடி, நீச்சல் போட்டி, டென்னீஸ், செஸ், கேரம் என 30க்கும் மேற்பட்ட உள் மற்றும் திறந்தவெளி அரங்க விளையாட்டு போட்டிகளில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 23 மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவர்கள், 350 மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறந்த அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வரும் ஜூன் 11ம் தேதி இரவு 8 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படுகிறது. தமிழக அளவில் மருத்துவக் கல்லூரிகளிடையே நடைபெறும் இப்போட்டிகள் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தற்போது மதுரை மருத்துவக்கல்லூரி சார்பில் இந்த விளையாட்டி போட்டிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post 2 ஆண்டுக்குபின் மதுரையில் துவக்கம் மருத்துவக் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: