19 குழந்தைகள் பலியான சம்பவம் இதயத்தை நொறுக்கிய சோகம்: கமலா ஹாரிஸ் உருக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த  துப்பாக்கிச் சூடுதால் எனது இதயத்தை நொறுக்கிய சம்பவம் சோகமாக உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் உருக்கத்துடன் கூறினார். அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த உவால்டே ராப் தொடக்கப் பள்ளியில்  நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் என 21 பேர்  கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில், ‘டெக்சாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், எனது இதயத்தை நொறுக்கியுள்ளது. இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் போதும். கடும் நடவடிக்கை மற்றும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதற்கான தைரியமும் நமக்கு இருக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நாங்கள் நிற்கிறோம்; உங்களது துக்கங்களில் பங்கேற்போம்’ என்று உருக்கத்துடன் கூறினார். …

The post 19 குழந்தைகள் பலியான சம்பவம் இதயத்தை நொறுக்கிய சோகம்: கமலா ஹாரிஸ் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: