182 ஏக்கர் அரசு நில மோசடி வழக்கு அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு?

* ஓபிஎஸ் ஆதரவாளர் உட்பட 3 பேர் ‘‘திடுக்’’ தகவல்* சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணைதேனி: அரசு நிலம் 182 ஏக்கர் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதான ஓபிஎஸ் ஆதரவாளர் உட்பட 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நில மோசடி வழக்கில் பெரியகுளம் தெற்கு ஒன்றிய அதிமுக மாஜி செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, உதவியாளர் அழகர்சாமி ஆகியோர் கைதாயினர். இவர்களை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேனி மாவட்ட ஜூடிசியல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையொட்டி சிபிசிஐடி போலீசார், மூவரையும் அலுவலகத்திற்கு அழைத்து சென்று தனித்தனி அறைகளில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை 6 மணி வரை விசாரணை நடந்தது. டிஎஸ்பி சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி தலைமையில்  10க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக 3 பேரும் பதிலளித்ததாக தெரிகிறது. மேலும், இந்த முறைகேட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் மிக முக்கிய புள்ளிகளாக இருந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் கூறியதாகவும் தெரிகிறது. அப்போதைய ஆளுங்கட்சியினர் உத்தரவின்படி சில அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.இந்த மெகா மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? முறைகேடாக பட்டா மாறுதல் செய்ததில் ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு? கனிமவளத்துறையினருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்ததாக கூறப்படுகிறது. மூவரும் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியதாக ெதரிகிறது. இதனால் அதிமுகவை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் பீதியடைந்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆளுங்கட்சியினர் உத்தரவின்படி சில அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது…

The post 182 ஏக்கர் அரசு நில மோசடி வழக்கு அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? appeared first on Dinakaran.

Related Stories: