விம்பிள்டன் ‘ரவுண்ட் ஆப் 16’ல் 16 வயது ஆண்ட்ரீவா!

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரஷ்யாவின் 16 வயது வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா தகுதி பெற்று அசத்தினார். 3வது சுற்றில் சக வீராங்கனை அனஸ்டசியா போத்தபோவாவுடன் நேற்று மோதிய ஆண்ட்ரீவா 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆண்ட்ரீவா விளையாடும் 2வது கிராண்ட் ஸ்லாம் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 4வது சுற்றில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

செக் குடியரசின் வோண்ட்ருசோவா தனது 4வது சுற்றில் 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடி 7-6 (7-5), 3-6, 4-6 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஐவன் டோடிக் – லதிஷா சான் (தைவான்) இணையிடம் தோற்று வெளியேறியது.

 

The post விம்பிள்டன் ‘ரவுண்ட் ஆப் 16’ல் 16 வயது ஆண்ட்ரீவா! appeared first on Dinakaran.

Related Stories: