1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 197 கோயில்கள் ரூ.304 கோடியில் புரனரமைப்பு: அறநிலையத்துறை தகவல்

சென்னை: 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 197 கோயில்களில் ரூ.304 கோடியில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கலைச்செல்வங்களாக-பண்பாட்டுப் பேழைகளாகத் திகழும் கோயிகளின் பராமரிப்பிலும், மக்கள் மனம் மகிழும் வகையில் கோயில் விழாக்களை தவறாமல் எழுச்சியோடு நடத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக, இதுவரை 1339 கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரூ.200 கோடி நன்கொடையாளர்கள் வழங்கிய ரூ.104.84 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.304.84 கோடியில் தற்போது 197 கோயில்களில் பணிகள் நடந்து வருகின்றன. கிராமப்புற கோயில்களுக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் வழங்கப்பட்ட நிதி ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உதவிபெறும் கோயில்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1000 என்பது 1250 என உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 2500 கோயில்களுக்கு ரூ.100 கோடி கூடுதலாக அரசு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒருகால பூஜை கூட செய்ய நிதி வசதியில்லாத 12,959 கோயில்களுக்கு வழங்கப்பட்ட வைப்பு நிதி தலா ஒரு லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.130 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2,000 கோயில்கள் ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 17,000 கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக மட்டும் அரசு ரூ.200 கோடி மானியமாக வழங்கியுள்ளது. இப்படி, கோயில் பணிகள் சிறப்பாக நடந்து இந்து சமய அறநிலையத் துறை புதிய பரிமாணம் அடைந்து வருவதைக் கண்டு பொதுமக்களும் பக்தர்களும் முதல்வரையும், தமிழ்நாடு அரசையும் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.

The post 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 197 கோயில்கள் ரூ.304 கோடியில் புரனரமைப்பு: அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: