சின்னஒரப்பம் கிராமத்தில் எருதாட்டம் கோலாகலம்

கிருஷ்ணகிரி, பிப்.21: சின்னஒரப்பம் கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சின்னஒரப்பம் கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட எருதுகள் அழைத்து வரப்பட்டிருந்தன. அவ்வாறு அழைத்து வரப்பட்ட எருதுகளை கிராமத்தின் நடுவில் இரண்டு பக்கமும் சவுக்கு கம்பத்தால் தடுப்பு அமைத்து, குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட விட்டு, ஸ்டாப் வாட்ச் மூலம் கண்காணித்து குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் எருதுகளுக்கு முதல் பரிசாக ₹50 ஆயிரம் முதல் ₹2500 வரை மொத்தம்

37 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதில் முதல் பரிசு ₹50 ஆயிரத்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பவரது காளைக்கும், இரண்டாவது பரிசு ₹40 ஆயிரம் வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரின் காளைக்கும், மூன்றாம் பரிசு ₹30 ஆயிரம் மல்லப்பாடி பிரபாகரன் என்பவரின் காளைக்கும் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவினை காண சின்னஒரப்பம், ஒரப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர்.

விழாவின் போது, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் கந்திகுப்பம் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: