வேதலோக வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சேந்தமங்கலம், டிச.5: சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் “இன்னொவேஷியா-19” என்ற அறிவியல் மற்றும் புதுமைப் படைப்புகளின் கண்காட்சி நடந்தது. இதில் 300 அடி உயரம் சென்ற ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் இருந்த சென்சார் வெப்பநிலை, ஈரப்பதம், அழுத்தம் போன்றவற்றை பதிவு செய்து அனுப்பியது. எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரை உள்ள 500 மாணவ, மாணவிகள், 30க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கருவிகளை காட்சிக்கு வைத்திருந்தனர். அதில், ஹெல்மெட் போட்டால் தான் வண்டி இயங்கும், போதையில் எடுத்தால் ஸ்டார்ட் ஆகாது போல், ஆம்புலன்ஸ்க்கு தானாகவே வழிவிடும் ஸ்பீட் பிரேக்கர், விவசாயிகளுக்கு உதவிடும் விதமாக ஈரப்பதத்தை கணித்து நீர்பாய்ச்சும் கருவி, மழை வந்தால் தானாகவே மூடும் ஜன்னல் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட புதுமை படைப்புகளை வைத்திருந்தனர்.  முன்னதாக பள்ளி தாளாளர் குரு, கண்காட்சியை  திறந்து வைத்து பேசினார். இதற்கான ஏற்படுகளை முதல்வர் ஷீபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: