அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி,நவ.5: மாதேப்பட்டி கிராமமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி ஒன்றியம் மாதேப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மாதேப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில், 48 குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக, மின் இணைப்பு கேட்டு போராடி வருகிறோம். ஆனால், 48 குடும்பத்தில் 3 வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர்.

இதனால் இரவில் வயதானவர்கள் தெருவில் நடக்க முடிவதில்லை. மேலும் குழந்தைகள் படிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் குடிநீர் வசதியும் இல்லை.இதனால் 2 கி.மீ தொலைவில் உள்ள மாதேப்பட்டி மேம்பாலம் அருகில் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம்.இதனால் தொடர்ந்து பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு திர்வு வீடுகளுக்கு பட்டா இல்லாததே காரணம். எனவே எங்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கி, மின் இணைப்பு மற்றும் குடிநீர்  இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: