ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி

கிருஷ்ணகிரி.நவ.5: கிருஷ்ணகிரி பள்ளி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2019-2020ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உடல்நலம், மன வளத்தை மேம்படுத்தும் வகையில், அப்பள்ளிகளில் பணியாற்றும் 110 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மன வளக்கலை மன்றத்துடன் இணைந்து 3 நாள் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.நேற்று நடந்த முதல் நாள் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்து, பயிற்சியின் நோக்கம், பயன்கள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, மனவளக்கலை மன்றத் தலைவர் சண்முகம் மற்றும் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த கோவிந்தசாமி, பாலதண்டாயுதம், மகாலிங்கம், சரஸ்வதி அம்மாள், ராஜம், ஜெயஸ்ரீ, லோகநாதன், சுதர்சன், பாஸ்கர், பூங்காவனம், ரங்கசாமி, சண்முகவேல் மற்றும் விலோ ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Related Stories: