மழைநீர் செல்வதால் பொதுமக்கள் அவதி

கொள்ளிடம், டிச.5: கொள்ளிடம் அருகே 500 ஏக்கர் நிலங்களுக்கு சாலையே வடிகாலாக மாறிய அவல நிலை நீடிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பன்னங்குடி, ஆலாலசுந்தரம், நல்லவிநாயகபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 500 ஏக்கர் நிலங்களில் தேங்கும் தண்ணீர் சாலையின் குறுக்கே கடந்து சென்று வெளியேறுகிறது. மாதானம் கிராமத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் சாலையின் குறுக்கே ஆலாலசுந்தரம் என்ற இடத்தில், வயல்களில் தேங்கிய மழை நீர் எளிதில் வழிந்து வடியும் வகையில் சற்றுபள்ளமாக சிமெண்ட் கான்கீரீட் அமைக்கப்பட்டு அதன் வழியே வயலில் தேங்கும் அதிகபடியான நீர் சென்று வடிகிறது. எந்த அளவுக்கு தண்ணீர் வயல்களில் தேங்கினாலும் ஒரு சில தினங்களில் தண்ணீர் எளிதில் சென்று வடிந்து விடுகிறது.

சாலையின் குறுக்கே தண்ணீர் செல்லும் போது சாலையில் செல்வோர்கள் எந்த சிரமமும் இன்றி நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். மிக விரைவாக தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பாக இந்த சாலை இருப்பதால் அனைத்து தரப்பு விவசாயிகளும் சாலையின் வழியே தண்ணீர் வடிந்து செல்வதையே விரும்புகின்றனர். எனவே இந்த சாலையின் குறுக்கே பாலம் கட்ட வேறு குழாய்கள் அமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாசில்தார் சாந்தி தொடுவாய் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்து அந்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: