கீழ்வேளூரில் சர்வதேச பேரிடர் தினம் ஒத்திகை நிகழ்ச்சி

கீழ்வேளூர், அக்.17: நாகை மாவட்டம் கீழ்வேளூர் தீயணைப்பு துறை சார்பில் சர்வதேச பேரிடம் குறைப்பு தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கபிலன் முன்னிலையில் பொதுமக்களுக்கு பேரிடர் மற்றும் இயற்கை இடர்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள், இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது போன்ற விழிப்புணர்வு குறித்தும், பேரிடர் நேரத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த செயல் விளக்கம் கீழ்வேளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் துணை தாசில்தார் ஜெயன், வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: