நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 40 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஆக.22: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்றைய ஏலத்துக்கு நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விரலி மஞ்சள் 590 மூட்டை, உருண்டை மஞ்சள் 280 மூட்டை, பனங்காளி மஞ்சள் 30 மூட்டை என மொத்தம் 900 மூட்டை மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் 9,089க்கும், குறைந்தபட்சம் 6,832க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் 7,112க்கும், குறைந்தபட்சம் ₹5,302க்கும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் 13,339க்கும், குறைந்தபட்சம் 8,489க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 900 மூட்டை மஞ்சள், 40 லட்சத்துக்கு விற்பனையானது.

Related Stories: