தமிழகத்தில் இரண்டாவதாக வேதாரண்யம் சிறந்த நகராட்சியாக தேர்வு பொதுமக்கள் பாராட்டு

வேதாரண்யம், ஆக.14:தமிழகத்தில் வேதாரண்யம் நகராட்சி இரண்டாவது சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.வேதாரண்யம் நகராட்சியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். 1944ம் ஆண்டு பேரூராட்சியானது 1982ம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியானது. 2004ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்ந்தது. 21 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சி கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 30 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நகராட்சியில் பொது சுகாதாரம் அடிப்படை வசதிகள் குடிநீர் தெருவிளக்கு 60 கி.மீ. தார்சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. சென்ற ஆண்டு கஜா புயலில் பாதித்தபோது 15 நாட்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து பொதுமக்களை இயல்பு நிலைக்கு திரும்ப செய்தனர்.

இதையொட்டி 201819க்கான தமிழகத்தின் 2வது சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பரிசும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு இரண்டாம் பரிசு பெற்ற நகராட்சியின் பணியாளர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.மக்களை மிரட்டிய நல்லபாம்புநாகை மாவட்ட கலெக்டர்பல்லவன் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வைட்டுக் கொண்டிருந்தபோது ஜேசிபி எந்திரம் தூர்வாரியபோது 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு வெளிக்கிளம்பி வாய்க்காலில் தப்பியோடியது இதைக் கண்ட பொதுமக்கள் மிரண்டனர். அந்த பாம்பு வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் குழாய்க்குள் புகுந்து பதுங்கிக் கொண்டது, இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: