45 நாட்களில் முடிக்க இலக்கு வேதாரண்யம் அடுத்த வௌ்ளப்பள்ளத்தில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும்

வேதாரண்யம், ஆக.11: வேதாரண்யம் தாலுகா வௌ்ளப்பள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மீனவர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் மீன்பிடிக்கச் செல்கின்றனர். மீனர்கள் வலையில் காலா, ஷீலா, வாவல், திருக்கை, நண்டு, இறால், அதிகளவில் கிடைக்கும். மட்லீஸ்ட் மீன்களும் நாள்தோறும் கிடைக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக புயல் மழை மற்றும் இயற்கை பேரிட காலங்களில் வௌ்ளப்பள்ளம் உள்ள படகுகளை நிறுத்துவதற்கு துறைமுகம் இல்லை. எனவே புயல், மழை காலங்களில் படகு பலத்த சேதமடைகிறது. அதேபோல் பைபர் படகுகளை அதிக செலவு செய்து டிராக்டர் வைத்து இழுத்து கரைக்கு அப்பால் வைக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் நாள்தோறும் மீன்பிடித்து வரும் மீனவர்கள் துறைமுக வசதியில்லாததால் கடலில் படகை நன்கூரம் வைத்து நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அப்படி படகை நிறுத்தும் போது காற்றின் வேகத்தின் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகிறது.

இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. தற்போது மீன்பிடி தடைகாலத்திற்கு படகுகளை பழுது பார்ப்பதற்கு படகுகளை வெளியூருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே படகை நிறுத்துவதற்கு வௌ்ளப்பள்ளத்தில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.மீனவர்கள் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது தூண்டில் முள் அமைப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்து அதற்கான ஆய்வுப் பணியும் நடந்துள்ளது.எனவே மீனவர்களின் நலன் கருதி போர்கால அடிப்படையில் பணியை துவங்கி விரைந்து முடித்து விரைவில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என வௌ்ளப்பள்ளம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: