கரூர் பகுதியில் சூறாவளி காற்றால் பொதுமக்கள் திணறல்

கரூர், ஆக. 11: கரூரில் சூறாவளி காற்றின் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரூரைப் பொறுத்தவரை மழைக்கு பதிலாக சூறாவளி காற்றுத்தான் வீசி மக்களை சிரமப்படுத்தி வருகிறது.பலத்த சூறாவளி காற்றின் காரணமாக சாலையில் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாத நிலை நிலவி வரும் நிலையில் இந்த காற்றின் காரணமாக புழுதியும் பல்வேறு பகுதிகளில் பறந்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அவதிப்பட வைத்து வருகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான் நிலவி வருகிறது. காற்றின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Related Stories: