அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு ரோந்து அமைப்பு துவக்கம்

அரியலூர், ஜூலை 25: அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை மற்றும் கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு ரோந்துவில் முதற்கட்டமாக மான்போர்ட் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 50 நபர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் முன்னிலை வகித்தனர்.இதைதொடர்ந்து மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென சமூக சேவை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்பதால் அவர்களிடம் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு தொப்பி, பெல்ட், ஆர்எஸ்பிபேட்ச் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சாலை பாதுகாப்பு ரோந்து அமைப்பு துவக்கி வைக்கப்படும் என்று கல்வித்துறை சார்பில் உறுதியளித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: