மதுரைவீரன் கோயில் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும்

நாமக்கல், ஜூலை 24:  நாமக்கல் 7வது வார்டு மதுரைவீரன் கோயில் சாலை சந்திப்பில். வேகத்தடை மற்றும் ரவுண்டான அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக 7வது வார்டில் பொய்யேரிக்கரை, மதுரைவீரன்புதூர், திருவள்ளுவர் காலனி மற்றும் இபி காலனி உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பால், நகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மதுரை வீரன் கோயில் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தின் பின்புறம் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையை இணைக்கும் வகையில் புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோட்டை பகுதியில் உழவர் சந்தை எதிரே பொய்யேரிக்கரை சாலை வழியாக கருப்பப்பட்டிபாளையம் சென்று திருச்செங்கோடு சாலையை அடைவதற்கான சாலையும் போடப்பட்டுள்ளது. இந்த 2 சாலைகளும் மதுரைவீரன் கோயில் எதிரே உள்ளது. தற்போது இந்த சாலைகள் சந்திக்கும் பகுதி மிகவும் அகலமாக உள்ளது. பள்ளிக்கு செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோவை மற்றும் சேலம் புறவழிச்சாலையில் செல்ல இந்த இரண்டு சாலைகளையும் வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில், அதிக வேகமாக வாகனங்களை இயக்கும் போது விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து சாலை சந்திப்பில் வேகத் தடை, பேரி கார்டு மற்றும் ரவுண்டான ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று 7வது வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: