குழாய் உடைப்பால் சாலையில் தேங்கிய குடிநீர்

ஓசூர், ஜூலை 24: ஓசூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்காக நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலைகளில் குழாய் அமைக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், தாலுகா அலுவலகம் எதிரில் குழாய் அமைக்கும் பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. இதனால், சாலை குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில்  உழவர்சந்தை, போலீஸ் ஸ்டேசன், நீதிமன்றம், பிடிஓ அலுவலகம், வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்கள் ஒரே இடத்தில் உள்ளதால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். குழி தோண்டப்பட்ட பகுதியில் குடிநீர் பைப்லைன் உடைந்து குட்டையாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பொது மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் உடைந்த குழாயை சீரமைத்து, சாலை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: