வேதாரண்யத்தில் கோடைகால கடலை சாகுபடி மும்முரம்

வேதாரண்யம், ஜூலை 24: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், குரவப்புலம், நெய்விளக்கு, வௌ்ளப்பள்ளம், நாலுவேதபதி, பெரியகுத்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கோடைகால கடலை சாகுபடியை மும்முரமாக செய்து வருகின்றனர்.வேதாரண்யம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழைநீர் கடலை பயிருக்கும் பயனுள்ளதாக உள்ளதால் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது. இதனால் பூக்கும் தருவாய் உள்ள கடலை செடிக்கு மண் அணைக்கும் பணியில் விவாசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக முதல்போக கடலை சாகுபடி தை மாதத்தில் நடைபெறும். அப்போது அதிகளவில் கடலை சாகுபடி நடைபெறுவதால் போதுமான விலை இருக்காது.இரண்டாம் போகமான ஆடி மாத கோடை கடலை சாகுபடி செய்யப்பட்ட கடலைக்கு நல்ல விலை கிடைக்கும். கோடை சாகுபடிக்கு ஏற்ற மழை தற்போது பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கடலை சாகுபடி அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: