தரங்கம்பாடி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் நீர் குடிநீருக்காக விற்கப்படும் அவலம்

தரங்கம்பாடி, ஜூலை 24: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை பம்புசெட் மூலம் எடுத்து குடிநீராக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி இலவச மின்சாரம் மூலம் விவசாயத்திற்கு பயன்படும் பம்புசெட்களில் இருந்து தண்ணீரை எடுத்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் தேவைக்காக விற்கப்படுவதாக பொதுமக்கள் தரங்கம்பாடி தாசில்தார் மற்றும் நாகை கலெக்டருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.புகார் அம்மனுவில் கூறியிருப்பதாவது:நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் காழியப்பநல்லூர் மற்றும் மாமாகுடி பகுதியில் பம்புசெட்களில் இருந்து இலவச மிந்சாரம் மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் தட்டுப்பாடு உள்ள காரைக்கால் பகுதிக்கு விற்பனை செய்யப்படுகின்றனர். இதனால் விவசாய தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதிகளில் தண்ணீர் கீழ்நிலைக்கு சென்று கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: