தண்ணீரை சேமித்து சாகுபடி செய்ய மண் ஈரப்பதம் கண்டறிதல் கருவி

புதுக்கோட்டை, ஜூன் 18: தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றங்களால் மழையின் அளவு குறைந்து வருவதால் நிலத்தடி நீர்மட்டமானது படிப்படியாக குறைந்து வருகிறது. விவசாயி களாகிய நாம் தண்ணீரின் தேவையை அறிந்து சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடியும். விவசாயிகள் நீரை அதிகம் பயன் படுத் தும் பயிரான நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.நுணுக்கமான நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைந்திருப்பதால் தேவைக்கு அதிகமான தண்ணீரை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் தண்ணீரை பயிருக்கு அதிகம் அளிப்பதன் மூலம் கரும்பின் எடையானது அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.நீர் மேலாண்மையை நுணுக்கமான முறையில் கடைபிடிக்க மண் ஈரப்பதம் கண்ட றிதல் கருவியை கோயமுத்தூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக கரும்பு இனவிருத்தி நிலையம் 2016ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது.மண் ஈரப்பதம் கண்டறிதல் கருவியானது மேற்பூச்சியுடன் கூடிய நுண்ணுணர்வு கம்பிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை 2 இரும்பினாலான நுண்ணுணர்வு கம்பிகளாகும். அதன் இடைவெளி 5சென்டி மீட்டராகும். இந்த கருவியில் கம்பி இரண் டாகவோ அல்லது ஒன்றிணைந்த கம்பியாக இருக்கும்.இந்த கருவியின் மேல்பாகத்தில் மின்கடத்தும் பலகை பொருத்தப்பட்டிருக்கும். அதன்மீது சிறிய 10 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஏஏ பேட் டரி மற்றும் கட்டுப்படுத்தும் ஸ்விட்ச் அமைக்கப்பட்டிருக்கும். மண் ஈரப்பதம் கண்டறியும் கருவியை வயலில் உள்ள பயிரின் வேர்ப்பகுதியில் பொருத்தி வைக்கும் போது கம்பிகளின் மூலம் நுண்ணுணர்வு கடத்தப்பட்டு விளக்குகள் எரியும்.

மண்ணின் ஈரப்பதத்தை சிறிய எல்இடி விளக்குகளின் நீலம், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம் எரிவது கண்டு தெரிந்து கொள்ள இயலும். நீலநிற விளக்கு எரிந்தால் பயிரின் தேவைக்கு அதிகமாக ஈரப்பதம் இருப்பதாகவும், பச்சை நிற விளக்கு எரிந் தால் பயிருக்கு போதுமான ஈரப்பதம் இருப்பதாகவும், ஆரஞ்சுநிற விளக்கு எரிந்தால் ஈரப்பதம் குறைவாக இருப்பதாகவும், சிவப்புநிற விளக்கு எரிந்தால் மிகமிக ஈரப்பதம் குறைவாக இருப்பதாகவும் கண்டறிந்து தேவையான தண்ணீரை பயிருக்கு அளித்து தண்ணீரை சேமிக்கலாம்.மண் ஈரப்பதம் கண்டறியும் கருவி அனைத்துவித வேளாண் பயிர் மற்றும் மாடித் தோட்ட பயிர்களுக்கு உகந்தது. அதுமட்டுமில்லாமல் அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. இதை பயன்படுத்தி உடனே மண் ஈரப்பதத்தை கண்டறியலாம். கருவியின் விலை ரூ.1,500 ஆகும்.கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் கரும்பில் நீர் மேலாண்மை என்ற முதல்நிலை செயல்விளக்க திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி, மண்ஈரப்பதம் கண்டறிதல் கருவி யின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாக எடுத்துரைத்து ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மண் ஈரப்பதம் கண்டறிதல் கருவி வழங்கப்பட்டது.இது குறித்து விவசாயி நாகராஜ் கூறுகையில்,கரும்புக்கு 8 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய் ச்சுவது வழக்கம். ஆனால் மண் ஈரப்பதம் கண்டறிதல் கருவியை பயன்படுத் தியதன் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்த்து வருகிறோம். இதனால் ஒரு மாதத்துக்கு ஒரு தண்ணீர் விடுவது குறைக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.இவ்வாறு தண்ணீரை சேமிப்பதன் மூலம் இந்தாண்டு கூடுதலாக ஒரு ஏக்கர் நெல் நடவு பயிர் செய்துள்ளேன். மேலும் இந்த கருவி மூலம் நீர் அதிகம் பாய்ச்சினால் தான் கரும்பு எடைக்கூடும் என்ற நம்பிக்கை குறைந்து நீரை சேமிக்க முடிகிறது. அனைத்து மாவட்ட கரும்பு மற்றும் வாழை விவசாயிகள் இந்த கருவியை பயன் படுத்தி சேமித்த தண்ணீரை கொண்டு கூடுதல் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம் என்றார்.

Related Stories: