பெண் தொழிலாளர்களுக்கு தனி அமைச்சகம் தேவை வாழ்வுரிமைக்கான ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், மே 22. பெண் தொழிலாளர் வாழ்வுரிமைக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தோழி தமிழ்நாடு அமைப்பின் சார்பில், பெண் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கான ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. முருகேசன் வரவேற்றார். நல்லையன்பாண்டி திட்டஅறிமுகவுலையாற்றினார். அரெட்ஸ் ராஜசேகர் பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்கும்தொழிலாளர் நலச்சட்டங்கள்,அரசு திட்டங்கள் குறித்து பேசினார். சித்ரா, பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில், அரசின் குறைந்தபட்ச கூலி சட்டத்தை அனைத்து தொழிற்சாலைகளிலும் உறுதி செய்யவேண்டும். வன்முறையற்ற வேலைச்சூழல் உத்தரவாதப்படுத்த வேண்டும். அனைத்து பணியிடங்களிலும் தொழிலாளர் நலச்சட்டங்கள்நடைமுறைப்படுத்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனி அமைச்சகம்உருவாக்க வேண்டும். வேலை பழகுனர் என பல ஆண்டுகளாக வேலையில் வைத்திருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: