தேர்தல் பணிகளில் அலுவலர்கள் மும்முரம் வருமானம், சாதிசான்று விரைந்து வழங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியலுார், மார்ச்27: தேர்தல் பணிகளில் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் வருமானம் சாதிசான்று விரைந்து வழங்கப்படுமா? என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களுக்கு உரியசாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை பெறு கின்றனர். தற்போது வரும் கல்வி ஆண்டு துவங்குவதால் மாணவர்களை பள்ளி ,கல்லூரியில் சேர்க்க வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் தேவைப் படுகிறது. தாலுகா அலுவலகங்களுக்கு சான்றிதழ் பெற சென்றால் எந்த அலுவலர்களும் இல்லை என்றும், தேர்தல் பணி இருப்பதால் சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறுகின்றனர். ஆன்லைனிலும் சம்பந்தபட்டவர்கள் பார்வைக்கு பின் தான் சான்றி தழ் பெற முடியும். அதன் மூலமும் சான்றிதழ் பெற இயலவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து நுகர்வோர் மையத்திற்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: