வேதாரண்யம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

வேதாரண்யம், மார்ச் 15: வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான சுரேஷ்குமார் பார்வையிட்டார்.  பின்னர் அவர் தெரிவித்ததாவது:தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, 100 சதவீதம் வாக்குப்பதிவினை எட்டும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும், தனியார் கிராமியக் கலைக்குழுவினர் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள், வீட்டு அருகில் வசிப்போர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார்,   வேதாரண்யம் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: